தொடருந்து விபத்துக்களை தடுக்க புதிய அமைப்பு: அமைச்சர் பந்துல தகவல்
பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க புதிய இலகுரக தடுப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் ரூ.1.5 மில்லியன் தொகையில் இந்த அமைப்பு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இது ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
களனி பள்ளத்தாக்கு புகையிரத பாதையில் விபத்துக்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு புதிய முறைமையை அறிமுகப்படுத்தும் நோக்கில் கொடகம புகையிரத நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அது வெற்றியடைந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை ஜேர்மன் புகையிரத தொழில்நுட்ப பயிற்சி நிலையம், இரத்மலானை அதன் நிலையை மேம்படுத்துவதற்காக ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்றார்.
மேலும் சர்வதேச மட்டத்திற்கு தொழிலாளர்களை அனுப்பும் வகையில் இதனை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ரஷ்ய பல்கலைக்கழகம் ஒன்றுடன் கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அதிலிருந்து வெளியேறும் அனைவரையும் ரயில்வே துறைக்கு நியமிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.