புத்தாண்டிலிருந்து பிரித்தானியாவில் நடைமுறையாகும் புதிய சட்டங்கள்
பிரித்தானியாவில் புத்தாண்டு முதல் புதிய சட்டங்கள் பல நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரதானமாக புகைப்பிடிக்கும் விதிகளில் கணிசமான மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் இளைஞர்கள் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்க முடியாது என கூறப்படுகிறது. அதாவது 14 வயது நிரம்பிய ஒருவர் இனி ஒருபோதும் சிகரெட் வாங்க அனுமதிக்கப்படமாட்டார்கள். என பிரித்தானிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக 16 வயது நிரம்பிய எவரும் சிகரெட் வாங்க முடியும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு புகைப்பிடிக்கும் வயது வரம்பானது இனி ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

தேசிய அளவிலான ஊதியம்
தற்போது நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த புதிய சட்டத்தால் 2040ம் ஆண்டுக்குள் இளையோர்களை புகைப்பிடிப்பதில் இருந்து கண்டிப்பாக மீட்க முடியும் என தற்போதைய பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் 21 வயது நிரம்பிய ஊழியர்களுக்கு மணிக்கு 11.44 பவுண்டுகள் ஊதியமாக அளிக்கப்பட வேண்டும் என்பதோடு முதன்முறையாக பிரித்தானியாவில் 21 மற்றும் 22 வயதுடையோருக்கு தேசிய அளவிலான ஊதியமளிக்க ரிஷி சுனக் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இது மட்டுமன்றி குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வு மற்றும் ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களால் அளிக்கப்படும் டிப்ஸ் தொகை இனி ஊழியர்களுக்கே வழங்கப்படும் என்ற சட்ட திருத்தமும் நடைமுறைக்கு வர இருக்கிறது.
மேலும், புத்தாண்டு முதல் XL bully நாய்களுக்கு பிரித்தானியாவில் தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 31 முதல் XL bully நாய்களை இனப்பெருக்கம் செய்விப்பது, விற்பனை, விளம்பரம், பரிமாற்றம், பரிசாக அளிப்பது, அல்லது பிரித்தானியா மற்றும் வேல்ஸ் வீதிகளில் விட்டுவிடுவது உள்ளிட்டவை சட்டத்திற்கு புறம்பானவை என தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு
மேலும், தொழில்முறை ஊழியர்கள் 29,000 பவுண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆண்டு ஊதியமாக ஈட்டினால் மட்டுமே இனி விசா அனுமதி என்ற சட்டமும் புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதேவேளை கார் உற்பத்தியாளர்களுக்கு புதிய சட்டம் ஒன்றும் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி விற்கப்படும் வாகனங்களில் 22 சதவிகித பூஜ்ஜிய உமிழ்வு கொண்டவையாக இருக்க வேண்டும். என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி 2035ல் இந்த எண்ணிக்கை 100 சதவிகிதமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், தற்போதைய ரிஷி சுனக்கின் அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் பல புதிய சட்டங்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri