இஸ்ரேல் எல்லையில் தொடரும் பதற்றம்: காசாவில் மேலும் பலர் உயிரிழக்கலாமென ஐ.நா எச்சரிக்கை
இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் காசாவில் மேலும் பலர் உயிரிழக்கக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
காசா முழுவதும் மனிதாபிமானமற்ற நிலைமைகள் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரி வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் உடனடியாக தனது குண்டுவீச்சை நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு
அத்துடன், காசாவின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள குழந்தைகளை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக காசாவிற்கு வெள்ளிக்கிழமை 600,000 தடுப்பூசிகளை வழங்கியதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில் பதற்றம்
இதேவேளை, காசா போர் தீவிரமடைந்து வருவதால், லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
தெற்கு லெபனானில் மேலும் இரண்டு ஹிஸ்புல்லா படையினரின் தளங்கள் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
