பிரித்தானியாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்! 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவிப்பு
பிரித்தானியாவில் செல்லப் பிராணிகளைத் திருடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனையும் விதிக்கப்படவுள்ளது.
நாய்கள், பூனைகள் என செல்லப்பிராணிகளுக்கும் உணர்ச்சிகள் உள்ளன, அமுல்படுத்தப்படவுள்ள புதிய சட்டத்தின் கீழ் அவற்றை திருடுவதும் கடத்துவதும் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என கூறப்படுகின்றது.
பிரித்தானியாவில் கோவிட் காரணமாக முதல்முறையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், செல்லப்பிராணிகள் அதிகளவில் விற்பனையாகும் நிலையில்,செல்லப்பிராணிகள் திருட்டை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக இவ்வாறு சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக விலை உயர்ந்த நாய்கள் அதிகள் திருடப்பட்டு கடத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், புதிய Pet Abduction சட்டம் கொண்டுவர அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து அரசாங்கத்தின் செல்லப்பிராணி திருட்டு பணிக்குழு அதன் அறிக்கையை இறுதி செய்து வருகின்ற நிலையில்,பணிக்குழுவினர் இது தொடர்பாக செல்லப்பிராணிகள் மற்றும் வீட்டு விலங்குகளுக்கான தொண்டு நிறுவனங்கள், வளர்ப்பவர்கள் மற்றும் காவல்துறையினரிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.