இலங்கையில் இயற்றப்படவுள்ள புதிய சட்டம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Sripala De Silva) குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியாது ஆயிரம் ரூபா சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையாகப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான வகையில் குறித்த சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தொழில் ஆணையகத்தில் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
சட்டத்தரணிகள் ஊடாக வழக்கு விசாரணைக்கு செல்ல தொழிலாளர்களுக்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam