தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தவறாக பரப்புவோருக்கு எதிராக புதிய சட்டம்
சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
காதல் உறவுகளின் போது எடுக்கப்படும் தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை, உறவு முடிந்த பிறகு, சமூக ஊடகங்கள் மூலம் மற்றவர்களைத் துன்புறுத்துவதைத் தடுக்க தொடர்புடைய புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம்
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், முதன்முறையாக இவ்வாறான குற்றத்திற்காக பிடிபடும் நபருக்கு ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனை அல்லது 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய குற்றத்திற்காக இரண்டாவது முறையாக அல்லது மீண்டும் மீண்டும் பிடிபடும் நபர், அதற்குரிய தண்டனை அல்லது அபராதம் இரட்டிப்பாக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
