சிங்கள பேரினவாதத்தால் மனித புதைகுழியான தமிழர் தாயகம்: தீபச்செல்வன்(Video)
இலங்கை அரசாங்கத்தின் நீதி கட்டமைப்பானது உண்மையிலேயே நீதியுடன் செயல்பட்டு இருந்தால் தமிழர்கள் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது என எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நீதி வழங்கும் நடவடிக்கை அசமந்தப்படுத்தப்பட்டால் வடக்கு - கிழக்கு மண் மீண்டும் கிளர்ந்தெழும், எங்களுடைய தேசம் ஒருபோதும் நீதியைக் காணாது உறங்காது எனவும் இதன்போது சுட்டிக்காட்டி உள்ளார்.
பன்னாட்டு விசாரணை
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுமார் 2000 நாட்கள் கடந்த நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களை உருக்கி - தங்களை இழந்து செய்கின்ற அந்தப் போராட்டமானது இந்த மண்ணில் நீடிக்கத் தான் போகிறது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி போன்று எதிர்காலத்தில் இன்னும் பல மனிதப் புதைகுழிகள் தேசத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.
அவை எல்லாவற்றிற்கும் பன்னாட்டு விசாரணையே தீர்வாக இருக்கும். அதற்கான அநீதியும் சர்வதேச ரீதியாக இருக்கும். இதனை இலங்கையில் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது எனவும் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய விடயங்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
