கல்முனையில் புதிய காணிப் பதிவாளராக பதவியேற்ற சுசிகரன் (Photos)
கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தின் புதிய காணிப் பதிவாளராக சிவசுந்தரம் சுசிகரன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் கடந்த 2005ம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பு காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தில், மேலதிக காணிப்பதிவாளராக சுமார் 9 ஆண்டுகளும், மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலகத்தில், மேலதிக மாவட்டப் பதிவாளராக 02 ஆண்டுகளும், இறுதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், மேலதிக மாட்டப் பதிவாளராக சுமார் 07 ஆண்டுகளும் கடமை புரிந்துள்ளார்.
கடிதப் போராட்டம்
வைபவ ரீதியாக கல்முனை காணிப்பதிவகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் ஏ.எச்.முஹம்மட் பாஜில் தலைமையில் காணிப்பதிவக சக ஊழியர்கள் சகிதமாக மாலை அணிவிக்கப்பட்டு சுசிகரன் வரவேற்கப்பட்டுள்ளார்.
கிழக்கில் இந்த சுசிகரன் மட்டுமே முதாலாம் தர அதிகாரி என்பதால் கிழக்கில் ஏ.ஆர்.ஜி சமன் குமார ஒரு பதவி உயர்வு பெறவுள்ளதால் சுசிகரனை கல்முனையிலிருந்து விட்டு விடக் கூடாது என்ற ஒரு கடிதப் போராட்டம் நடத்தும் நிலை ஒன்று உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |