நெடுஞ்சாலை அமைச்சரின் ஆலோசனைக்கு ஏற்ப ஒளிமயமான புதிய களனி பாலம்
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், நெடுஞ்சாலை அமைச்சராகவும் செயற்பட்ட 2014ஆம் ஆண்டில் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து இலங்கையில் முதல் உயர் தொழிநுட்ப கேபிள்களை பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தை உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியாக ஒளிமயமாக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கடந்த 2021-07-04 ஆம் திகதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பின் அழகை மேம்படுத்த புதிய களனி பாலம் முக்கிய காரணியாக இருக்கும் என்பதால் களனி ஆற்றினதும் பாலத்தினதும் இயற்கை அழகை வெளிப்படுத்த இந்த ஒளிமயமாக்கல் பங்களிக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, வளர்ந்த நாடுகள் பாலங்களை அழகுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் புதிய தொழிநுட்பங்களில் கவனம் செலுத்தி அவை எமது நாட்டுக்கு ஏற்றதாக இருந்தால், புதிய களனி பாலத்திற்கு அந்த நுட்பங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலின் பேரில் புதிய களனி பாலம் 2021-09-13ஆம் திகதி பரீட்சார்த்தமாக ஒளிமயமாக்கப்பட்டுள்ளது.




விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam