காணாமல் போன உலகப்புகழ்பெற்ற சீன தொழிலதிபர் இருக்கும் இடம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்
காணாமல் போனதாகக் கூறப்படும் உலகப்புகழ்பெற்ற ANT கூட்டு நிறுவனத்தின் ஸ்தாபகரான ஜக் மா தற்சமயம் காணாமல் போகாவோ, தடுத்து வைக்கப்படவோ இல்லையென வெளிநாட்டு நிறுவனங்களின் அறிக்கையொன்று குறிப்பிட்டுள்ளது.
ANT கூட்டு நிறுவனத்தின் ஒரு பங்குதாரரான அலிபாபா நிறுவனத்தினால வெளியிடப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் மிகவும் ஒரு தாழ்வான நிலையில் இருப்பதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் தன்னை வெளியில் காண்பிக்காமல் உள்ளாரே தவிர அவர் காணாமல் போகவில்லை. அநேகமாக அவர் சீனாவின் ஹங்க்சூ பகுதியில் இருக்கக்கூடுமென கருதப்படுகிறது. அங்குதான் அலிபாபா நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது எனவும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் நிதி நிலை தொடர்பில் ஜக் மா விமர்சனம் வெளியிட்டிருந்த நிலையில் அவரது நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதாக சீன அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்த நிலையிலே ஜக் மா காணாமல் போயுள்ளதாக தகவலொன்றும் வெளியாகியிருந்தது.
அலிபாபா நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆபிரிக்க வணிகர்களுக்கான மிக முக்கியமான நிகழ்வொன்றில் நடுவராக அறிவிக்கப்பட்ட ஜக் மா, அதில் கலந்துகொள்ளாததால் ஜக் மா தொடர்பிலும், அவர் இருக்கும் இடம் தொடர்பிலும் பல ஊகங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.