உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட சலுகை! பரீட்சை திணைக்களத்தின் புதிய அறிவிப்பு
புதிய இணைப்பு
சீரற்ற வானிலை காரணமாக தமது தேசிய அடையாள அட்டை அல்லது ஏனைய அடையாள ஆவணங்களை இழந்த மாணவர்கள் தபால் அடையாள அட்டை அளவுள்ள, உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு புகைப்படங்களைச் சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஒன்றினைச் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக அடையாள அட்டை
இதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள்: அதிபரால் சான்றளிக்கப்பட்ட மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு புகைப்படங்களுடன் கூடிய தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகள்: கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய தற்காலிக அடையாள அட்டையைச் சமர்ப்பிக்கலாம்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், பாடசாலைச் சீருடை இல்லாவிட்டால் தமக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமக்கு அருகிலுள்ள பாதுகாப்பான பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர 2025 பரீட்சைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை அறிவித்துள்ளார்.
பரீட்சை மையங்கள் மீண்டும் தயார்
இதற்காக நாடு முழுவதும் 2,086 பரீட்சை மையங்கள் மீண்டும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் வழக்கமான நடைமுறையின் படி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பரீட்சை மையங்களுக்குச் செல்லும்போது தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறும் அமைச்சகம் மாணவர்களைக் கேட்டுக்கொள்கின்றது.
கடந்த நவம்பர் மாதம் நாட்டை தாக்கிய டித்வா சூறாவளி காரணமாக, பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவியதை தொடர்ந்து அந்த நேரத்தில் நடைபெற்று வந்த உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri