யாழில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல்! சேவை முடக்கம் என அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோடார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரி தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் சங்கம் நாளை (9) தீவகத்தில் சேவை முடக்கத்தினை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சாரதி மீது கடும் தாக்குதல்
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (7) மாலை ஊர்காவற்றுறை பொலிஸ் ஆளுகைக்குள் இருக்கும் வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்து.

இது குறித்து தெரியவருகையில், நேற்று (7) மாலை யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வழித்தடம் 780 தனியார் பேருந்து, பயணிகளுடன் ஊர்காவற்றுறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயம் அல்லைப்பிட்டி பகுதியில் மேட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒருவர் பேருந்தை வழிமறித்து பேருந்தில் ஏறி சாரதி மீது "உனக்கு வாகனம் ஓட்டத் தெரியாதா" எனக் கேட்டு சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது சாரதி கடுமையான தாக்குதலுக்குள்ளாவதினை அவதானித்த பயணிகள் தாக்குதல் நடத்திய நபரை பேருந்தில் இருந்து இறக்கியுள்ளனர்.
சேவை முடக்கம் அறிவிப்பு
இதையடுத்து கடும் தாக்குதலுக்குள்ளான சாரதி பயணிகளுடன் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளதுடன் தாக்கிய நபர் தொடர்பான விபரத்தையும் மக்களின் தரவுகளுடன் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

அத்துடன் கடமையின் போது கடுமையான தாக்குதலுக்குள்ளான சாரதி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சாரதி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த குறித்த சாலையின் தனியார் பேருந்து நிர்வாகத்தினர், குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நாளை 09 ஆம் திகதி பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri