தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கல் தொடர்பில் வெளியான தகவல்!-செய்திகளின் தொகுப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கல் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வாடகை வாகன சாரதி ஒருவரால் மலேசியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கவேண்டுமென வழங்கிய மனுவை மலேசிய பிராந்திய நீதிமன்றம் நேற்று முன்தினம் (29) தள்ளுபடி செய்துள்ளது.
விவாதங்களை அடுத்து பொதுநலன் தொடர்பான விடயம் என்ற அடிப்படையில் மூன்று நீதிபதிகளை கொண்ட நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மனு தொடர்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் சட்ட வரம்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று நீதிபதிகள் தமது நிராகரிப்புக்கு காரணம் காட்டினர்.
முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளை, பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்குவதற்கான மனுவினை மீள்பரிசீலனைக்காக, 2020 ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதியன்று மனுத்தாரர் பாலமுருகன், நீதிமன்ற ஆணையை பெற்றார்.
எனினும் 2020, செப்டம்பர் 7ஆம் திகதியன்று மேல் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது. இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டபோதும், அதிலும் மனு நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
