நுவரெலியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய புதிய சுயேட்சைக் குழு
நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புதிய சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
"இனியாவது நமக்காக நாம்" என்ற அமைப்பின் ஊடாக இந்த சுயேட்சைக் குழுவினால் இன்று (08.10.2024) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த சுயேட்சைக் குழுவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்திய ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“நாட்டை வளப்படுத்துவதற்கு பல ஆண்டுகளின் பின்னர் ஒரு அதிசயம் நடந்தது போல் ஒரு இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் தேர்தல் மூலமாக ஜனாதிபதியாக ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றிணைந்துள்ள இளைஞர்கள்
அதேபோல், மலையகத்தில் அனைத்து பகுதிகளும் வெவ்வேறு மாற்றம் நிகழ வேண்டும் என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
அதற்காகவே, பழைய கட்சிகளை புறக்கணித்து இளைஞர்கள் ஒன்றிணைந்து சுயேட்சையாக களம் இறங்கி உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
