லொத்தர் டிக்கட்டுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தேசிய லொத்தர் சபை டிக்கட்டுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேசிய லொத்தர் சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும், தேசிய லொத்தர் சபை டிக்கட்களின் ஊடாக சட்டவிரோத பந்தய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சட்டவிரோத பந்தயம்
தமது டிக்கெட்களின் இறுதி இலக்கங்களை அடிப்படையாக வைத்து, இந்த சட்டவிரோத பந்தயம் நடத்தப்பட்டு வருகின்றமை குறித்து தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி, இந்த சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபடுவோர், ஒத்துழைப்பு வழங்குவோர் மற்றும் அதனுடன் தொடர்புபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என எச்சரித்துள்ளது.
எனவே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தேசிய லொத்தர் சபை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri