இலங்கையில் அமுலுக்கு வரவுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள்
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக வாகன பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களின் பயணங்கள் அதிகரித்துள்ளமையினால் அதிக எரிபொருள் பயன்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக மாற்று நடவடிக்கை ஒன்றைய தேட வேண்டும் என அவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கொழும்பிற்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, வீடியோ தொழில்நுட்பம் மூலம் வாரத்தில் ஒரு நாள் பாடசாலை நடத்துதல், போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நேரங்களில் அலுவலகங்களை திறப்பது, அரச நிறுவனங்களில் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு அதிகாரிகளை வரவழைப்பதை கட்டுப்படுத்துதல், பிரதேச செயலாளர்கள் போன்றவர்களை கொழும்பிற்கு வரவழைப்பதை மட்டுப்படுத்தி இணையத்தில் கலந்துரையாடல்களை நடத்துதல் போன்ற யோசனைகள் அவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சாலைக்குத் தேவையான ஆற்றலை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெற தொழில்துறையினரை ஊக்குவிக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் போக்குவரத்து தடை? - அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam