இன்று வெளியாகவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள்
கோவிட் நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது அமுலிலுள்ள சுகாதார விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
புதிய சுகாதார வழிகாட்டல்கள் நாளைய தினம் (31) வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் பொதுமக்கள் செயற்படும் விதம், அடுத்த இரண்டு வாரங்களில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த பொறுப்புடன் செயலாற்றுமாறு விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடவும் பல மடங்கு வேகமாக ஒமிக்ரோன் வைரஸ் பரவுவதை அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலைமை தொடருமானால் பெப்ரவரி மாதம் இறுதிக்குள் நாடு முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பணியகத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
யார் கூறுவது உண்மை? யாழில் பாடையில் ஏற்றப்பட்டது 13வது திருத்தம் - (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam