பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த வடக்கின் புதிய ஆளுநர்
வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja), முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து வடமாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை விஜயம் செய்த ஆளுநர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
வட மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் செய்யப்பட வேண்டிய விடயங்கள் குறித்து நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார (Jagat Palikakkara), யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே (Priyantha Liyanage), யாழ். மற்றும் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், கடற்படை, விமானப்படை, இராணுவ அதிகாரிகளுடனும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் ஆராய்ந்துள்ளார்.







7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
