திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள அரசின் புதிய திட்டம்
திருகோணமலை சீனக் குடா விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நேற்று(30.07.2026) திருகோணமலை துறைமுகப் பகுதியை பார்வையிடச் சென்றிருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
சீனக் குடா விமான நிலையம்
இந்த விஜயத்தின் போது அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் முதன்முதலாக சீனக் குடா விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த குழுவினர் விமான நிலைய முனையத்தில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் தேவைகள் குறித்து டபிள்யூ. பி. பெரேராவுடன் இணைந்து ஆராய்ந்துள்ளனர்.

எதிர்காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் இந்தச் சீனக்குடா விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான பயன்பாட்டிலில்லாத பழமையான முனையங்களான சிலோன் ஜெட்டி, ஓல்ட் (Old) ஜெட்டி, டவுன் ஜெட்டி, 1947 ஜெட்டி, மன்கோ ஜெட்டி மற்றும் பொறியியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மவுத்தோ ஜெட்டி உள்ளிட்டவற்றின் பௌதிக நிலையை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்துள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து அதிரடியாக இருவர் கைது - சந்தேக நபர்களிடம் இருந்த மீட்கப்பட்ட பொருள்





