வெட்கமே இல்லாமல் மகிந்தவுடன் இணைந்த மைத்திரி! மீண்டும் ராஜபக்சர்களின் அரசாங்கம் - ரோஹிதவின் அறிவிப்பு
2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஆனால் காலவோட்டத்தின் பின்னர் 2019 ஆம் ஆண்டு வெட்கமில்லாமல் எம்முடன் இணைந்துக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
காலி முகத்திடல் பயங்கரவாத போராட்டத்தை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் அரசியலும், ராஜபக்சர்களின் அரசியலும் முடிவுக்கு வந்து விட்டது என்று குறிப்பிட்டார்கள்.
ராஜபக்சர்களின் தலைமையில் தனித்த அரசாங்கம்
ஆனால் ராஜபக்சர்களின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஒருதரப்பினர் இன்றும் அரசியல் பிரச்சாரம் செய்துக் கொள்கிறார்கள்.
2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஆனால் காலவோட்டத்தின் பின்னர் 2019 ஆம் ஆண்டு வெட்கமில்லாமல் எம்முடன் இணைந்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் இருப்பை தக்கவைத்துக் கொண்டார்.
ராஜபக்சர்களின் புண்ணியத்துடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது குறிப்பிடுகிறார் பொதுஜன பெரமுன என்ற கட்சி ஒன்று இல்லை என்று.
கட்சியை பலப்படுத்த மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்துடன் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
டலஸ் - அனுர கூட்டணி பொதுஜன பெரமுனவுக்கு சவாலாக அமையாது. கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேசிய தேர்தல்களில் ராஜபக்சர்களின் தலைமையில் தனித்த அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என குறிப்பிட்டார்.
You May like this





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
