எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளதுடன், உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு
இந்த விலை குறைப்புடன் ஒப்பிடும் போதே ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் எரிபொருள் பயன்பாடு தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன பேச்சாளர் ஒருவர் கூறுகையில், நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.
எரிபொருளின் தேவை
பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான அளவு குறைவு, QR முறைப்படி மட்டும் எரிபொருளை விடுவித்தல், எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க நுகர்வோர்கள் முயற்சி எடுக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் எரிபொருளின் தேவை குறைந்துள்ளது.

முன்னதாக மாதாந்தம் சுமார் 4000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை இருந்தது. இந்த நிலையில் தற்போது அது 2000 மெட்ரிக் தொன்களாக குறைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri