முன்னின்று செயல்பட்ட அமெரிக்க நிறுவனம்: வெளிவரும் தகவல்கள்
அமெரிக்க நிறுவனமான நியூ போற்றீஸ் எனர்ஜி (New Fortress Energy) , கேள்விப்பத்திர நடைமுறையை மீறி, இலங்கையில் மேற்கொள்ளவுள்ள எல்என்ஜி எாிவாயு விநியோக ஒப்பந்த செயற்பாட்டை நிறுத்தவேண்டும் என்று அமெரிக்கத் தூதரகத்திடம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளா் சபை இது தொடா்பில் இலங்கையில் உள்ள அமெரிக்கத் துாதரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அமெரிக்க நிறுவனத்தினால் கோரப்படாத கேள்விப்பத்திர முன்மொழிவு இந்த விடயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையானது, மின்சார சபையின் கேள்விப்பத்திர முறையை குறைமதிப்புக்கு உட்படுத்தியுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கோரப்படாத முன்மொழிவை இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்புவதில் அமெரிக்கத் தூதரகமே ஈடுபட்டமையால், அமெரிக்காவையும் இந்த முறை பாதிக்கும் என்று மின்சார சபையின் பொறியியலாளா் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் சர்வதேச கேள்விப்பத்திர முறையைப் புறக்கணித்து மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாடு, தொடா்ந்தும் முன்னெடுக்கப்படுமானால், கடும் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளா் சங்கம் எச்சரித்துள்ளது.