60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிய நிதி நிவாரணம்: மத்திய வங்கியினால் அறிமுகம்
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணமொன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05 சதவீதத்தினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் மீளளிப்பினை வழங்கும் முறை ஒன்றினை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
காலாண்டுக்கு 25,000 ரூபா
இதன்படி 60 வயது அல்லது அதற்கு கூடுதலான வயதுடைய மற்றும் வருடாந்த வருமானம் 1,200,000க்கும் அதிகரிக்காத சிரேஷ்ட பிரஜைகள் மீளளிப்பினை பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிரேஷ்ட பிரஜைகள் காலாண்டுக்கு 25,000 ரூபாவினை மீளளிப்பாக கோர முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.