வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அம்சம்
வாட்ஸ்அப் செயலியில் (WhatsApp) இணைய இணைப்பு (Internet) இல்லாமல் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் கோப்புகளை பகிரும் வசதியை மெட்டா நிறுவனம் (Meta) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியானது அதன் தளத்தை All in One சேவைகளுக்கான மையமாக மாற்றியமைக்கும் திட்டத்தில் மற்றுமொரு அம்சமாகவே இந்த புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
புதிய அம்சம்
அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் செயலி தற்போது இணையம் இல்லாமல் ஆவணங்களை மற்றவர்களுடன் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இணையவசதி இல்லாமல், புளூடூத் உதவியுடன் Share it மற்றும் Near By Share போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களை அனுப்பமுடியும்.
அந்தவகையில் இப்போது வாட்ஸ்அப் செயலியும் இந்த சேவைகளை வழங்குகிறது.
அத்துடன் ஆவணங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பவும் இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும் என்றும் இந்த அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் பயனர்கள் WhatsApp System Files, Photo Gallery அணுகல் போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த அம்சம் தற்போது beta பயனர்களால் சோதனை முறையில் சோதிக்கப்பட்டு வரும் நிலையில் இது விரைவில் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
