வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இந்த வசதி விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
சாரதி அனுமதிப் பத்திரங்கள்
இத்திட்டத்தின் கீழ், 14 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும்.
அத்துடன் இலங்கையில் நீண்ட காலம் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
