வவுனியா சேக்கிழார் மன்றத்தின் புதிய நிர்வாக தெரிவு
வவுனியா சேக்கிழார் மன்றத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்று(5) வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள இந்துமா மன்ற அலுவலகத்தில் வவுனியா பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமாலினி முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
18 ஆவது ஆண்டை நோக்கிச் செல்லும் வவுனியா சேக்கிழார் மன்றத்தின் நிர்வாகத் தெரிவு மன்றத்தின் தலைவர் க.ஐயம்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
நிர்வாக தெரிவு
அந்தவகையில் சேக்கிழார் மன்றத்தின் புதிய தலைவராக முன்னாள் அதிபரும், வவுனியா மத்தியஸ்த சபையின் முன்னாள் தவிசாளருமான சி.வரதராசா தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக ஆசிரியரும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினரும், ஊடகவியலாளருமான கி.வசநதரூபன் , உப தலைவராக மத்தியஸ்த சபை உறுப்பினரும், ஊடகவியலாளருமான சி.திவியா , உப செயலார்களாக ஒய்வு நிலை விரிவுரையாளர் செ.சத்தியநாதன் மற்றும் பா.சுந்தரராஜன் பொருளாளராக முன்னாள் மத்தியஸ்த சபை உறுப்பினரும், ஒய்வு நிலை உத்தியோகத்தருமான தா.சலசலோசன் கணக்காய்வாளராக நா.தியாகராஜா, நிர்வாக குழு உறுப்பினர்களாக கேசலா, குலேந்திரன், கு.கோகுலன், சுஜித்தா, நாகராஜா, மோகனதாஸ், சி.கஜேந்திரகுமார், துரைராஜா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன், போசகர்களாக க.ஐயம்பிள்ளை, தணிகாசலம், நா.வில்வராஜா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
