அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மனம் திறந்த அமைச்சர் பிமல்
நான் எதிர்க்கட்சியினரிடம் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு வேலை செய்யபவனல்ல என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், "எதிர்க்கட்சியினர் நாங்கள் செய்த நல்ல விடயங்களை பாராட்டியதும் இல்லை. இணைந்து செயற்பட்டதுமில்லை. கள்வர்களை கைது செய்யும் போதே இணைந்து செயற்பட்டனர். அதனால் பாலாபோன எதிர்க்கட்யினரே உள்ளனர்.
நான்கு ஐந்து மாதங்கள் பேச்சுவார்த்தைகளின் பின்னரே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் பின்னரே மாற்றம்
எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதாரம், தேசிய ஒருமைப்பாடு,போதை பொருளை கட்டுப்படுத்தல், டிஜிட்டல் மயப்படுத்தல், அரச சேவையை துரிப்படுத்தல் போன்ற முன்னிலை காரணங்களை கருத்தில் கொண்டு பல பேச்சுவார்த்தைகளின் பின்னர் புதிய திறமையானவர்களுக்கு அமைச்சு மற்றும் பிரதியமைச்சர் வழங்குவதென்ற பொது இனப்பாட்டின் பிரதிபலனே இந்த மாற்றம்.
இந்த அமைச்சு பாரிய பொறுப்பாகும். துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு பெரும் சவாலானதாகும். இதில் மக்கள் தொடர்புகள் குறைவானதாகும். ஆனால் நகர அபிவிருத்தி மக்களுடன் தொடர்புபட்டதாகும், அதனால் வேலைத்திட்டங்கள் அதிகமானதாகும்.
இந்த அமைச்சில் இதற்கு முன்னர் இருந்தவர்கள் அமைத்துள்ள திட்டங்களை முன்னெடுத்து செல்வதே எனது வேலைத்திட்டமாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




