முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூவர் கைது
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள திம்பிலி கிராமத்தில் ஜஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றைதினம்(10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று வீடு ஒன்றினை சோதனை செய்தனர்.
மூவர் கைது
இதன்போது, ஜஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் கணவன் மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், 10 கிராம் ஜஸ்போதைப்பொருளுடன் 23 அகவையுடைய குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரது மனைவியான 18 அகவையுடை பெண் 80 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
இதேநேரம் இவர்களின் வீட்டில் தங்கி நின்ற யாழ்ப்பாணம் கொக்காவில் மேற்கு பாரதி வீதியினை சேர்ந்த 17 அகவையுடைய யுவுதி ஒருவரும் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 9 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.




