வடக்கின் சுற்றுலாத்துறையில் புதிய சகாப்தம்
வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், வடமாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடம் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு விசேட கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக, வடக்கின் 400இற்கும் மேற்பட்ட சுற்றுலாத் தளங்களை மேம்படுத்த பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துதல்.
சுற்றுலாத்துறையில் மாணவர்கள்
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவப் பாடத்திட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீனப்படுத்துதல்.

வடக்கின் சுற்றுலா வளர்ச்சி குறித்த தரவு சார்ந்த ஆய்வுகளை இணைந்து முன்னெடுத்தல்.
சுற்றுலாத்துறையில் மாணவர்களுக்கு நேரடி களப்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நிர்வாக முறை மாற்றப்படாவிட்டால்..என்பிபி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

