பேச்சுவார்த்தை இல்லையேல் போராட்டம் வெடிக்கும்..! இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
தற்போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான புதிய கல்விச் சீர்திருத்தம் தாம் எதிர்பார்த்த முறையில் அமையவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் யோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போதைய கல்வி முறைமை ஆசிரியர்களுக்கு, பெற்றோர்களுக்கு ,மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்விக்கு மாற்றம் அவசியம். ஆனாலும் தற்போதைய அரசாங்கம் கொண்டு வருவது கல்வி சீர்திருத்தம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, பாடசாலை மாணவர்களின் நேரம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் எந்த அமைப்புடனும் கலந்துரையாடாமல் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |