ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடையை விதிக்க தாயாராகும் அமெரிக்கா
உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள ரஷ்யா மீது அழுத்தத்தைத் தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் வங்கி மற்றும் எரிசக்தி நடவடிக்கைகள் உட்பட ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அதிகாரிகள் இறுதி செய்துள்ளதாக மூன்று அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த இலக்குகளில் அரசுக்கு சொந்தமான ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் வங்கித் துறைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனங்கள் அடங்கும் என்று நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் ஒப்புதல்
இருப்பினும், தடைகள் தொடர்பான ஆவணத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல் அளிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ரஷ்யாவின் அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு அவர் விலக்கு அளித்திருந்தார்.
எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ட்ரம்பின் அழைப்புகளை நிராகரித்திருந்தார்.
இந்த செயற்பாடுகளின் பின்னணியிர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணைக்குழு "ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் சில தண்டனை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது," என்று கூறப்படுகிறது.
இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் அளிக்க வேண்டும், இது முற்றிலும் அவருடைய அழைப்பு," என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
