கோவிட் தொற்றால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலுக்கு புதிய மருந்து - ஆய்வில் வெளியான தகவல்
கோவிட் தொற்றால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலுக்கு புதிய மருந்து பலன் அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளனர்.
இதன்போது முடக்குவாத நோய்க்கு பயன்படுத்தப்படுகின்ற நமிலுமாப் என்ற ஆன்டிபாடி மருந்து (நோய் எதிர்ப்பு பொருள்) மருந்தே இவ்வாறு பயனளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தொற்றால் நிமோனியாவுக்கு உள்ளாகி வரும் நோயாளிகளுக்கு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த சுவாச மருந்து பயனளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபற்றி பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான பென் பிஷர் கூறும்போது, “கோவிட் தொற்றால் உண்டாகின்ற நிமோனியாவினால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நமிலுமாப் வீக்கத்தைக் குறைக்கின்றது என்பதற்கான முக்கிய ஆதாரத்தை எங்கள் ஆராய்ச்சி வழங்கி உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.