டொலரில் ட்ரம்பின் உருவம்.. விரைவில் வெளியாகவுள்ள புதிய நாணயம்
2026ஆம் ஆண்டில் அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஒரு டொலர் நாணயத்தை வெளியிட அமெரிக்க கருவூலம் திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவம் கொண்ட இந்த நாணயத்தில், ஒரு பக்கத்தில் 'FIGHT' என்ற வார்த்தை மூன்று முறை இடம்பெற்றுள்ளது.
இது கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிக்குப் பிறகு ட்ரம்ப் கூறிய வார்த்தைகளைக் குறிக்கிறது.
படுகொலை முயற்சி
நாணயத்தின் மறுபக்கத்தில் ட்ரம்பின் உருவமும், 'லிபர்ட்டி' என்ற வார்த்தையும் அச்சிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்க சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டமான 1776 - 2026 ஐக் குறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நாணயத்தின் முன்பக்க வடிவம் குறித்த முதல் தோராயமான யோசனை இதுவாகும் எனவும் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அமெரிக்க செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |