தென் அந்தமான் தீவை அண்மித்த கடற்பரப்பில் புதிய தாழமுக்க பிரதேசம் : செய்திகளின் தொகுப்பு
தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கு மேலாகவும் நாளையதினம் புதிதாக ஒரு குறைந்த தாழமுக்க பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
