எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்
அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமையவே புதிய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எரிவாயு தடையின்றி வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் 2022- 2023 ஆம் ஆண்டுகளுக்காக 280,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான கப்பல் கட்டண டென்டர் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அண்மைக்காலங்களில் பரவிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது.
லிட்ரோ நிறுவனம் அதனை மேலும் தெளிவுபடுத்தும் வகையில் விசேட அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் முன்னைய நிறுவனத்தை விட குறைந்த கப்பல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் ஒன்றுடனேயே தாம் இப்போது ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.