இலங்கையில் புதிய நாணயம்
இலங்கையில் புதிய நாணய குற்றிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
நாணயத்தை வெளியிடும் நிகழ்வு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும், நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திருமதி சந்திரிகா எல். விஜேரத்ன மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி.அனுர குமார ஆகியோர் நாணயங்களை ஜனாதிபதியிடம் வழங்கி வைத்தனர்.
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், பிரதி ஆளுநர் என்.டி.ஜி.ஆர் தம்மிக நாணாயக்கார, நிதி அதிகாரி கே.எம் அபேகோன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.











ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
