தடுப்பூசிகளுக்கு ஈடுகொடுக்காத புதிய வைரஸ் திரிபு : இலங்கைக்குள் பரவும் ஆபத்து
உலகின் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள A 30 என்ற கோவிட் வைரஸ் திரிபு இலங்கைக்குள் பரவும் ஆபத்து இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்துகளுக்கு ஈடுகொடுக்காத இந்த வைரஸ் திரிபு நாட்டிற்குள் பரவினால், மிகவும் அழிவான நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து கோவிட் வைரஸ் திரிபுகளும் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், தற்போது பரவி வரும் புதிய திரிபு இலங்கைக்குள் பரவாது என்பதை உறுதியாக கூற முடியாது.
அந்த வைரஸ் திரிபு நாட்டுக்குள் பரவினால், தற்போது காணப்படும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றும் நிலைமையில், அது மிக வேகமாக பரவிச் செல்ல வாய்ப்புள்ளது.
இந்த புதிய வைரஸ் திரிபு நாட்டுக்குள் வராது என்று எம்மால் கூற முடியாது. இதுவரை உலகில் பரவிய அனைத்து வைரஸ் திரிபுகளும் மிக குறுகிய காலத்தில் இலங்கைக்குள் பரவின.
இதனால், புதிதாக பரவி வரும் வைரஸ் திரிபும் எதிர்காலத்தில் நாட்டுக்குள் வரலாம். வேகமாக பரவலாம். அப்படி நடந்தால், தடுப்பூசிகளை பெற்று அதனை நம்பி இருக்கும் மக்கள் மிகவும் சிரமமான நிலைமைக்கு தள்ளப்படுவர்.
இதன் காரணமாக சுகாதார வழிக்காட்டல்களை நாம் மிக கடுமையாக பின்பற்ற வேண்டும்.
எதிர்காலத்தில் இப்படியான மேலும் பல வைரஸ் திரிபுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. குறிப்பாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோர் மத்தியிலேயே புதிய வைரஸ் திரிபு தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இதனால், அவர்களுக்குள் பரவும் வைரஸ் தடுப்பூசிகளுக்கு ஈடுகொடுக்காத நிலைமை அதிகரிக்கும் ஆபதது எதிர்காலத்தில் ஏற்படலாம் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam