வாக்குறுதியை உடன் நிறைவேற்றுங்கள்: சஜித் அணி அரசிடம் வலியுறுத்து!
புதிய அரசமைப்பு இயற்றப்படும் என வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அநுர அரசு இழுத்தடிப்பு செய்து வருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
"புதிய அரசமைப்பு இயற்றப்படும் எனவும், அதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அநுர அரசு உறுதியளித்திருந்தது. எனினும், தற்போது புதிய அரசமைப்பு பற்றி எவ்வித கருத்தாடலும் இடம்பெறவில்லை." என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சர்வதேச மாநாடு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,"ஜனாதிபதி அநுரகுமார நாட்டு மக்களுக்காகப் பல தடவைகள் உரையாற்றியுள்ளார். சர்வதேச மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்.
எனினும், வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என அவர் கூறாமல் இருக்கின்றார்.
2015 - 2019 நல்லாட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசமைப்பு இயற்றப்படும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது.
புதிய அரசமைப்பு
அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதாக இருந்தால் அதற்குரிய பணிகளைத் தற்போது ஆரம்பித்திருக்க வேண்டும்.
அரசு ஒன்றின் 4 மற்றும் 5 ஆவது வருடத்தில் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணியை முன்னெடுப்பது, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது என்பனவெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகவே அமையும்.
ஆகவே, புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு எதிரணி முழு ஆதரவு வழங்கும்."என தெரிவித்துள்ளார்.

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
