உலகில் ஐந்து பேர் மாத்திரமே பார்த்துள்ள புதிய நிறம் கண்டுபிடிப்பு
உலகில் ஐந்து பேர் மாத்திரமே பார்த்துள்ள புதிய நிறமான 'ஓலோ' என்ற நிறத்தை கண்டுபிடித்துள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆய்வில் ஈடுபட்டுள்ள ஐந்து பேரே தற்போதைக்கு இந்த நிறத்தை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீல - பச்சை நிறத்தின் நிறைவுற்ற நிழல் என்று கூறப்படும் இந்த நிறத்தை, லேசர் தூண்டுதலின் உதவியின்றி வெற்று கண்ணால் பார்க்க முடியாது என கூறப்படுகிறது.
சாதாரண வண்ண உணர்வின் வரம்பைத் தாண்டிய நிறம்
இது சாதாரண வண்ண உணர்வின் வரம்பைத் தாண்டிய நிறம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது குறித்த தகவல், சயின்ஸ் எட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஓஸ் லேசர் கதிர்கள் ஒரு சில மைக்ரோன்களால் அதாவது ஒரு மீட்டரில் ஒரு மில்லியனில் ஒரு பங்கு "நடுங்கும்போது" இந்த நிறம் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தனது திருமணம் முடிந்த கையோடு நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு சென்ற பிரியங்கா.. புகைப்படம் இதோ.. Cineulagam
