1990 அம்புலன்ஸ் சேவைக்கு புதிய நிறம்.. சபையில் கடும் எதிர்ப்பு!
1990 - சுகப்படுத்தும் அம்புலன்ஸ் சேவையின் நிறத்தை தேசிய மக்கள் சக்தி கட்சியின் நிறத்தை போல மாற்றியதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(09.10.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்த 1990 - சுகப்படுத்தும் அம்புலன்ஸ் சேவை, நாட்டு மக்கள் மிகவும் விரும்பும் ஒரு சேவையாகும். அத்துடன், அந்த சேவை நாட்டு மக்களின் நம்பிக்கையையும் மரியாதயையும் பெற்றுள்ளது.
சட்டத்தில் திருத்தம்
இதன்மூலம், ஒவ்வொரு நாளும் 1050 நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இன்றுவரை, நாட்டில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சேவையின் பெயர், நிறம், அதிகாரப்பூர்வ சின்னம் ஆகியவற்றை தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் நிறம் மற்றும் வடிவத்திற்கு ஏற்ப மாற்றும் முயற்சி நடந்து வருகின்றது.
இந்த சேவையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அவ்வாறு செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சமையலறையில் மின்விசிறி நிறுவிய விவகாரம்... கடவுச்சீட்டை முடக்கி பெருந்தொகை அபராதம் விதிப்பு News Lankasri
