கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமனம்!
கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குமாரசிங்கம் குணநாதன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
நீண்டகால அனுபவம்
மூத்த அனுபவமிக்க அதிகாரி புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள குமாரசிங்கம் குணநாதன், அரச நிர்வாகத்துறையில் நீண்டகால மற்றும் நீண்டகால அனுபவத்தைக் கொண்டவராவார்.

அவர் இதற்கு முன்னர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், குச்சவெளி பிரதேச செயலாளர், வெருகல் பிரதேச செயலாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஆகிய நிர்வாக பதவிகளை வகித்தவர்.
கிழக்கு மாகாணத்தின் நிர்வாகக் கட்டமைப்பிலும், பிரதேச செயலக மட்டத்திலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ள இவர், தற்போது மாகாணத்தின் மிக உயரிய நிர்வாகப் பதவியான பிரதம செயலாளர் பதவியை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri