விரைவில் நியமிக்கப்படவுள்ள புதிய பிரதம நீதியரசர்
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஜூலை 27 ஆம் திகதியன்று 65 வயதை எட்டியவுடன் ஓய்வு பெறுவதோடு, எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று அவர் உயர் நீதிமன்றத்தில் பிரியாவிடை உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் அடுத்த பிரதம நீதியரசரை நியமிக்கப்படுவதற்கான பரிந்துரையை எதிர்வரும் புதன்கிழமையன்று மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள வெற்றிடத்தை நிரப்ப
மூப்பு நிலையின்படி, நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவே மூத்த நீதியசராக உள்ளார்.
இதற்கிடையில், உயர்நீதிமன்றில் தற்போதுள்ள வெற்றிடத்தை நிரப்ப மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ரத்னபிரிய குருசிங்கவின் பெயரை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

அதே நேரத்தில் நீதித்துறை சேவை ஆணையகத்தில் தற்போதுள்ள வெற்றிடத்தை நிரப்ப உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தனவின் பெயரையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் தலைவராக செயற்பட சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்னவை, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க நியமித்துள்ளார்.
அதன்படி, அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிவில் மற்றும் குற்றவியல் பிரிவுகளுக்குத் தலைமை தாங்குவார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri