கல்கிஸ்ஸை நீதிமன்ற தாக்குதல் சம்பவம் : வெளியான புதிய ஆதாரங்கள்
கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் நீதிமன்ற சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பின்னர், புதிய சிசிரிவி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
வாகனம் ஒன்றை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்த முற்படும் போது சாரதி ஆசனத்தில் அமர்ந்திருப்பவர் ஏதோ ஒன்று சொல்ல பொலிஸ் கான்ஸ்டபிள் அவரை தாக்குவதாக அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
புதிய சிசிடிவி காட்சிகள்
இந்த காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க கூறுகையில், நீதிமன்ற வளாகத்தில் எனது கனிஷ்ட சட்டத்தரணியை தாக்கிய காட்சியே குறித்த காணொளியில் தென்படுவதாக அவர் கூறினார். இச்சம்பவம் கடந்த அக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்றது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டு வரும் புதிதாக வெளியிடப்பட்ட காட்சிகளின்படி, வழக்கறிஞர் கான்ஸ்டபிளால் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்களை இது உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு அக்டோபர் 13 ஆம் திகதி வரை சிறையில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், புதிய சிசிடிவி காட்சிகள் குறித்து பொலிஸார் இன்னும் அதிகார பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




