வெலிக்கடை சிறைச்சாலை முன்புறம் புதிய சிசிடீவி கமெரா (Photo)
வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தின் முன்புறமாக புதிய சிசிடீவி கமரா தொகுதியொன்று நிறுவப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் நடைபெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக இந்த சிசிடீவி கமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் வௌிப்புறம் இருந்து பிரதான வாயிலை கண்காணிக்கும் வகையில் இந்த கமரா பொருத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சிறைச்சாலை ஊழியர்கள்
கடந்த காலங்களில் சிறைச்சாலை ஊழியர்கள் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்று கைதிகளுக்கு கூடிய விலைக்கு விற்பனை செய்து வந்த சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தடுக்கும் வகையிலேயே இந்தக் கமரா தொகுதி தற்போது பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
