தேசிய அரசாங்கம் மற்றும் புதிய அமைச்சரவை தொடர்பில் ரணிலின் திட்டம்: வெளியாகியுள்ள தகவல்
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்ததன் பின் தேசிய அரசாங்கத்தை அமைத்து புதிய அமைச்சரவையை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தான் ஜனாதிபதியின் பிரதான திட்டம் என தெரிவிக்கப்படுகின்றது.
கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு
அதற்கமைய அவர் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின் கட்சிகளுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
அந்த அழைப்பை ஏற்று அரசாங்கத்துடன் இணையும் கட்சிகளை வைத்து தேசிய அரசாங்கத்தை ஜனாதிபதி உருவாக்கவுள்ளார்.
அவ்வாறு இணைந்தாலும் கூட கட்சிகளின் விருப்பத்துக்கு ஏற்ப அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது.
அத்துடன் பதவிகளை எவ்வாறு வழங்குவதென்று தானே முடிவெடுப்பேன்
என்றும் சில நாட்களுக்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சிலருடன்
நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.