அசிங்கப்பட்டார் அமைச்சர் ஹரீன் - சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் மக்கள்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்து வந்த ஹரீன் பெர்னாண்டோ இன்றைய தினம் அமைச்சு பதவியை பொறுப்பேற்றிருந்தார்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியால் கண்டியில் இருந்து கொழும்பு வரை முன்னெடுத்த பாத யாத்திரையில் ஹரீன் பங்கேற்கிருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் ஜனாதிபதி முன்னிலையில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹரீன் பெர்னாண்டோ, ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது ஜனாதிபதியின் முகத்தைக்கூட பார்க்கவில்லை, படமும் எடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அமைச்சர்களின் பதவியேற்பு தொடர்பான செய்தி ஊடகங்களுக்கு பகிரப்பட்டது.

இதில் ஹரீன் பொய்யான முகம் அம்பலமானதுடன், சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய விடயமாக பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
இதேவேளை அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர்களை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri