புதிய அமைச்சரவை இன்னும் இழுபறியில்!
புதிய அமைச்சரவை நியமனம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது, இதோ நியமிக்கின்றேன், அதோ நியமிக்கின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இழுத்தடித்துக்கொண்டே இருக்கின்றார் என பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஜனாதிபதியை பல தடவைகள் தனியாகச் சென்று சந்தித்துள்ளார்.
இதன்போது மொட்டு கட்சியில் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாது என்று ஒவ்வொரு தடவையும் அழுத்தம் திருத்தமாகக் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சுப் பதவி
அப்படியென்றால், குற்றச்சாட்டுக்கள் இல்லாதவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குங்கள் என பசில் கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



