புதிய அமைச்சரவை நியமனம்: மொட்டுக் கட்சியின் கோரிக்கையை நிராகரித்த ரணில்
புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொட்டுக் கட்சியின் எதிர்பார்ப்பு
புதிய 12 அமைச்சர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் 11 பேரின் பெயர் அடங்கிய பட்டியலை 'மொட்டு'க் கட்சி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்தப் பெயர்ப்பட்டியலில் இருந்த இருவருக்கு உடனடியாக அமைச்சுப் பதவி வழங்க முடியாது எனவும், அவ்வாறு வழங்கினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை உருவாகும் எனவும் ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழுபறி நிலைக்கான காரணம்

எனினும், இவ்விருவருக்கும் அமைச்சுப் பதவி கட்டாயம் வேண்டும் என்று 'மொட்டு'க் கட்சி அறிவித்துள்ளது. இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam