மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்: எஸ்.பி. திசாநாயக்க
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் இதுவரை அமைச்சரவைக்கான முழுமையான அமைச்சர்கள் நியமனம் நடைபெறவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் அமைச்சரவை நியமனம் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமனம்
இதன்போது சில அமைச்சர்களின் பொறுப்புகள் குறைக்கப்பட்டு, இன்னும் சிலருக்கு வேறு பொறுப்புகளும் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஐக்கிய தேசியக்கட்சியின் வஜிர அபேவர்த்தன, சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் இதன்போது அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan