மூதூரில் ஆரம்பமான புதிய பேருந்து சேவை
சேருவிலயிலிருந்து மூதூருக்கான புதிய பேருந்து சேவையானது வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவினால்(Arun Hemachandra) இன்று(01) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து சேவையானது சேருவிலயிலிருந்து தோப்பூர் ஊடாக மூதூர் பிரதேசத்தை சென்றடையவுள்ளது.
புதிய பேருந்து சேவை
தினந்தோறும் மூன்று தடவைகள் இவ் பயணிகள் போக்குவரத்து சேவையானது இடம்பெறவுள்ளது.
நீண்ட காலமாக, போக்குவரத்து செய்வதில் பல்வேறு, அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்த, பல விவசாய கிராம மக்கள் இந்த புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பயன்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பேருந்து சேவை மூலம் சேருவில, தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், கணேசபுரம், கட்டைபறிச்சான் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நன்மையடயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண்டூர் பகுதி
இதேவேளை, இதுவரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரைக்கும் இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மீண்டும் நேற்று சனிக்கிழமை(01.02.2025) அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மண்டூர் பகுதியிலிருந்து இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்துள்ளது. இவ்வாறு இடம்பெற்று வந்த இந்த பேருந்து சேவை கடந்த 7 வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீறிநேசன், இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிகுடி சாலை முகாமையாளர் பூ.கோகுலவேந்தன், மற்றும் அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக தகவல்: ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |